மாணவர்கள் ஆதரவுக்கு பணம் வாங்கினேனா? எதிர்மறையான கருத்துகளுக்கு ஜோதிகா பதிலடி!

Wait 5 sec.

நடிகை ஜோதிகா நீட் தேர்வுக்காகப் போராடும் மாணவர்களுக்கு தான் அளித்த ஆதரவினால், எதிர்மறையாக கமெண்ட் செய்தவர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.நேற்றிரவு நடிகை ஜோதிகா, “தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும்” என நேரடியாகவே தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதேபோலவே, இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது ராஜிநாமாவை அறிவித்தார். அதற்குள்ளாக ஜோதிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் பணம் வாங்கியதாகவும் உள்பட பல்வேறு எதிர்மறையான கருத்துகளுடன் அவரை இழிவுபடுத்த சிலர் கமெண்ட் செய்தனர். நடிகை ஜோதிகா அதற்குப் பதிலடி கொடுத்தது வரவேற்பைப் பெற்றுள்ளது.ஜோதிகாவின் பக்கத்தில் ஒரு இணையவாசி, “அரசாங்கத்தின் உடைமைகளை சேதப்படுத்தியவர்களுக்கு ஆதரவா? இதையெல்லாம் அரசியல் ஆக்காதீர்கள்” எனக் கூற, நடிகை ஜோதிகா, “அரசாங்கம் மாணவர்களின் தலையையும் உடலையும் சேதப்படுத்தியதே அது குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?” எனப் பதிலளித்தார். மற்றுமொரு இணையவாசி, “தென்னிந்திய சினிமாவை ஜோதிகா தவறான வெளிச்சத்தில் காட்டுகிறார்” என்றார். அதற்குப் பதிலளித்த ஜோதிகா, “நான் தென்னிந்தியாவை நேசிக்கிறேன். அது எனது வீடு. நான் பாராட்டி பதிவிட்டுள்ளதையும் பாருங்கள். எதிர்மறையானதைத் தேர்வுசெய்யாதீர்கள்” என்றார். மற்றுமொருவர், “டூல்கிட் ஆக்டிவேட் செய்ததுபோல் இருக்கிறது. அனைத்து பிரபலங்களும் இன்று விழித்துக்கொண்டு சிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், உண்மையான நீட் பிரச்னைக்கு அல்ல” என்றார். இதற்கு ஜோதிகா, “ஓ, டூல்கிட்! கற்பனை. நான் மாணவர்களுக்கு ஆதரவளித்துதானே எழுதியிருந்தேன். ஒருமுறை சரிபார்க்கிறேன் இருங்கள்” எனப் பதிலளித்துள்ளார். ஒருவர், “பணம் எதுவும் வாங்கிவிட்டீர்களா? என்ன திடீரென பிரபலங்கள் எல்லாம் ஆதரவு தருகிறீர்கள்?” எனக் கேட்க, ”கடைசி இரண்டு வரிகளைப் படியுங்கள் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்” எனவும் பதிலளித்துள்ளார். கடைசியாக ஜோதிகா சிஸ்டம் என்ற தொடரில் நடித்திருந்தார். அவர் நடித்த ஸ்ரீகாந்த் படத்துக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.தேசிய விருது வென்ற இயக்குநருக்கு திரைக்கதையில் உதவிய ஜோதிகா! Jyotika hits back at critic alleging CJP paid her for supporting student protest