மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!

Wait 5 sec.

தமிழ்நாடு முழுவதும் அமைதியாக போராடும் மாணவர்கள் மீது காவல்துறை எந்த அச்சுறுத்தலையும் தரக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததையடுத்து தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஜூலை 20 போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், "வாக்குரிமை, சொத்துரிமை அனைத்துமே தமிழ்நாடு போராடிதான் பெற்றது. மாணவர்களின் ஒற்றுமைக்கு நான் தலைவணங்குகிறேன். நீட் ஒழிப்பை சட்டபூர்வமாக்கி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர போராடும் அனைவருக்கும் ஆதரவாக கட்சி வேறுபாடின்றி நாங்கள் ஆதரவு தருகிறோம். அரசியலில் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், மாணவர்களுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்போம். அதேபோல தமிழ்நாடு முழுவதும் அமைதியாக போராடுபவர்கள் மீது காவல்துறை எந்த அச்சுறுத்தலையும் தரக் கூடாது என்று கூறிக்கொள்கிறேன். யாருக்கும் செவிசாய்க்காதவர்களை நீங்கள் செவிசாய்க்க வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு தலைவணங்குகிறேன். எந்த திசைதிருப்பலுக்கும் இடம் கொடுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். முன்னதாக ஜூலை 21, 22 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய மாணவர்கள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். "திடீரென தூண்டுதலால், மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியான வழியில் போராடினால் அனுமதி வழங்கப்படும்" என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. minister rajmohan is participated in protest against NEET in chennaiஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!