சிஜேபி செய்தித் தொடர்பாளர்களுடனான மத்திய அமைச்சர்களின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.நீட் தேர்வில் நடைபெற்ற குளருபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.இதைத் தொடர்ந்து சிஜேபியினரின் இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடியை அவர்கள் பெற்றாக வேண்டும். ஜூலை 20 அன்று வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மீதமுள்ள இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபியினர் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் சிஜேபியினருடன் கலந்துரையாடுவதற்காக கான்ஸ்டிட்யூஷன் கிளப்பிற்கு வருகை தந்தனர். மேலும், அங்கிருந்த சிஜேபி செய்தித் தொடர்பாளர்களுடன் கலந்துரையாடி பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளனர்.இந்த சந்திப்பில் மீதமுள்ள இரண்டு நிபந்தனைகள் குறித்து ஆலோசித்திருக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது! - ராகுல் காந்தி! The talks between Union Ministers and CJP spokespersons have concluded.