நடிகை ஜோதிகா கூறிய அறிவுரை தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக தேசிய விருது வென்ற இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியுள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தை நாக வம்சி தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சூர்யா - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.இந்தப் படம் வரும் ஆக.14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: ஜோதிகா மேடமுக்கு எனது கதைக்களம் மிகவும் பிடித்திருந்தது. மிகவும் மதிப்புமிக்க பரிந்துரைகள் சிலவற்றையும் எனக்கு வழங்கினார். நான் இந்தக் கதையை பலரிடம் கூறியுள்ளேன். ஆனால், ஜோதிகா மேடம் அளித்த அந்தக் குறிப்பிட்ட பரிந்துரை மிகவும் உதவிகரமாக இருந்தது. படம் வெளியான பிறகு அந்த மாற்றம் எதுவென சொல்லுகிறேன் எனக் கூறியுள்ளார்.சமீபத்தில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசனத்துக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுதான் அவரது முதல் தேசிய விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.நல்ல விஷயங்களுக்கு நேரம் தேவைப்படும்... முதல்வர் விஜய்யுடன் நடிகர் ஜெய்! Venky Atluri shares key details on Jyotika's suggestions for Vishwanath and Sons: 'It was very helpful'