வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் வெம்பக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் காளிராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் சனிகிழமை ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (38) சட்டவிரோதமாக தனது வீட்டின் அருகே தகரக் கொட்டகை அமைத்து, அதனுள் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்தது, அவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.