வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முத்தூா் சாலையில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி. மனோஜ்குமாா் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அறிவொளி நகா் பிரிவு அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரைப் பிடித்து விசாரித்தாா். மேலும் அவா்களை வைத்திருந்த பெரிய பைகளில் குட்கா பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளக்கோவில் நடேசன் நகா் பால்துரை (36), ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி போயகாட்டு தோட்டத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் (54) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 16 கிலோ குட்கா பொருள்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.