அமைதி வழிப் போராட்டங்கள் அச்சுறுத்தலின்றி அனுமதிக்கப்பட வேண்டும்: ஐ.நா.

Wait 5 sec.

புது தில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றித் தெரியும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் முன்னரே வினாத்தாள் கசிந்ததாக நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜூன் 27 ஆம் தேதியில் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும்கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியில் போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, சிஜேபி கட்சியினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, இளைஞர்களின் போராட்டம் நிறைவுபெற்றது.இந்தியாவில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் பற்றி ஐ.நா. வின் நிலைப்பாடு பற்றி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அவர் பேசுகையில், "புது தில்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். அமைதியான முறையில் போராட விரும்புவோர் துன்புறுத்தல், கைது போன்ற அச்சமின்றி அவர்கள் அனுமதிக்கப்படுவது முக்கியம். அந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது பாதுகாப்புப் படையினரின் கடமை” என்று அவர் தெரிவித்தார். Peaceful protests must be allowed without intimidation: UNஎன் மகனை ஆரத்தி எடுத்து வரவேற்பேன்: சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம்!