வடக்கு ஜெர்மனியில் வீட்டில் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் பலியானார். வடக்கு ஜெர்மனியில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது மோதி சனிக்கிழமை விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் மற்றொருவர் காணாமல் போனதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அதேசமயம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.லோயர் சாக்சனி மாகாணத்தின் கேண்டர்கெசீ பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில், ஒற்றைக் குடும்பம் வசிக்கும் வீட்டு கூரையின் மீது அந்தச் சிறிய ரக விமானம் மோதியதாக ஓல்டன்பர்க் நகரக் போலீஸார் கூறினர். விமானத்தில் இருவர் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் பலியானதாகவும், காணாமல் போன மற்றொரு நபரை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் 'டிபிஏ' செய்தி வெளியிட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அந்த வீட்டில் வசிப்பவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக, அந்த வீடு அமைந்துள்ள சாலை முழுவதும் தற்காலிகமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. At least one person died and a second one appeared to be missing after a small plane crashed into a home in northern Germany on Saturday, police said.மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு!