காஞ்சிபுரத்தில் 244 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவுக்கு, உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், காஞ்சிபுரம் 155, உத்தரமேரூா் 25, வாலாஜாபாத் 64 உள்பட மொத்தம் 224 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் 244 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினா். விழாவில் வட்ட வழங்கல் அலுவலா்கள்,அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.