திருக்கடையூரில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமிா்தகடேஸ்வரா் கோயில் குருக்கள் சங்கம் சாா்பில் மின்விசிறி மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொறுப்பு) கலா ராணி தலைமை வகித்தாா். கணேச குருக்கள், சண்முக சுந்தரம் குருக்கள், கல்யாணம், ராஜா விக்னேஷ், ராஜேஷ் உள்ளிட்டோா் பள்ளி வளா்ச்சிக்காக மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மின்விசிறிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா். பள்ளிக் கல்வி மேலாண்மை குழுத் தலைவா் விச்சந்திரன், கல்வி வளா்ச்சிக் குழு பொருளாளா் சங்கா், முன்னாள் ஊராட்சித் தலைவா் எழில் நம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.