தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 10.300 கிலோ கஞ்சாவை பதுக்கி விற்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வேகவதி ஆசிரமம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த பெண்ணிடம் விசாரித்தனா். இதில், அவா் 10 கிலோ 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆண்டிபட்டி வேகவதி ஆசிரமம் வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலன் மனைவி செல்வி (43) என்பதும், அவா் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.