ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி ஆர்ஜென்டீனாவை வீழ்த்தியது. போட்டி முடிந்த பின்னர் ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கண்ணிருடன் வெளியேறினார். இது அவருக்குக் கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கலாம் என விமர்சகர்கள் கூறி வந்தனர். இதுபற்றிப் பேசிய ஆர்ஜென்டீனா அணியின் மற்றொரு வீரரான லியாண்ட்ரோ பரேடெஸ் பேசுகையில், ”மெஸ்ஸி தனது முடிவை எடுத்துவிட்டார் என்று தோன்றுகிறது. உலகக்கோப்பை இறுதிப்போட்டி தான் தேசிய அணிக்கான அவரது கடைசிப் போட்டி என நான் நினைக்கிறேன். ஆனால், அப்படி நடக்கக்கூடாது. அவர் மேலும் விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், இறுதி முடிவு அவரிடம்தான் உள்ளது. அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயமே எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். எனவே அவர் தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம். அவர் விடைபெறுவது வேதனையானது. ஏனென்றால், இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் நாங்கள் அதுபற்றியே பேசிக் கொண்டிருந்தோம். அதை நாங்கள் கொஞ்சம்கூட விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.ஆர்ஜென்டீனா அணியுடனான விளையாட்டு வாழ்க்கைக்கு மெஸ்ஸி முற்றுப்புள்ளி வைத்தால், அந்த அணியின் சார்பில் அதிகப் போட்டிகளில் விளையாடியவர், அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைகளுடன் அவர் விடைபெறுவார். ஆர்ஜென்டீனா அணிக்காக 205 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 127 கோல்களை அடித்துள்ளார். அவரது சர்வதேச தொடர் பங்கேற்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது 2022-ம் ஆண்டில் ஆர்ஜென்டீனா அணியை வழிநடத்தி 3-வது கோப்பை வெல்ல வைத்தார் மெஸ்ஸி. 36 ஆண்டுகால காத்திருப்பு அவரால் நிறைவுபெற்றது. 2026 தொடரில் ஆர்ஜென்டீனாவை வழிநடத்தியதன் மூலம் 3 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார். Is Messi retiring from the Argentina team?உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: 21 ஆண்டுகளுக்குப் பின் இறுதிச்சுற்றில் இந்தியா!