முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் காலை உணவுத் திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது 8 ஆம் வகுப்பு வரையில் தவெக அரசு விரிவாக்கம் செய்துள்ளது.இதற்கு முன்பு நான் முதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றிய நிலையில், தற்போது காலை உணவுத் திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது.Renaming of the Chief Minister's Breakfast Scheme