ஹிமாசலில் வாகனம் மீது ராட்சதப் பாறை விழுந்ததில் குழந்தை உள்பட 13 பேர் பலியாகினர். ஹிமாச்சல பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து ராட்சதப் பாறை அவ்வழியாக சென்ற வாகனம் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 6 மாதக் குழந்தை உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர். பாறைகள் விழுந்ததைத் தொடர்ந்து, வாகனத்தின் பின்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மற்றும் ராணுவத்தினர் தீயை அணைக்க முயன்றனர். வாகனம் தீயில் எரிந்து சிதைந்துபோன நிலையில் காட்சியளிக்கும் விடியோக்களும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குலுவிலிருந்து கில்லருக்குச் சென்று கொண்டிருந்த அந்த எஸ்யூவி ரக வாகனத்தில் மொத்தம் 15 பேர் பயணம் செய்தனர். Thirteen people were killed while two others had a narrow escape after massive boulders from a nearby hill suddenly fell onto a moving taxi on the Udaipur-Pangi road in Himachal Pradesh's Lahaul Spiti on Friday, police said.புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்