நடிகை கீர்த்தி சுரேஷ் பாரடைஸ் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது.தற்போது, தி பாரடைஸ் திரைப்படம் வருகிற செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் ஒடேசா இயக்கத்தில் தசரா திரைப்படத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மிட்டாய் மழை... துல்கரின் ஏஓடி திரைப்பட முதல் பாடல்!Reports indicate that actress Keerthy Suresh has joined the film Paradise.