திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனு! பிற்பகலில் விசாரணை!

Wait 5 sec.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன் நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தமக்கு ஜாமின் கோரி மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவையும் தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சிறையில் அடைக்க்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமின் கோரியும் மார்கண்டேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு வழக்கறிஞர் எஸ். காசிராஜன் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தார்.DMK MLA Markandeyan files bail plea; Madras HC Hearing scheduled for the afternoonஜன நாயகன் படம் பார்த்து கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்!