தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்க்க நடிகை த்ரிஷா, ரோகிணி திரையரங்குக்கு வந்திருக்கிறார்.சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ளது ரோகிணி திரையரங்கம். தமிழகத்தில் காலை 9 மணி முதல் ஜனநாயகன் திரையிடப்பட்டு வரும் நிலையில் சுமார் 11 மணியளவில் நடிகை த்ரிஷா, தோழிகளுடன் திரையரங்குக்கு வருகை தந்துள்ளார்.திரையரங்கில் த்ரிஷாவைப் பார்த்ததும், ஜனநாயகன் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. தேர்தல் பிரசாரத்துக்கு இடையே, தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்திருந்த படம் ஜனநாயகன். ஆனால், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் டம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.இதற்கிடையே, தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தவெக தலைவர் என்ற முறையில், விஜய் நடித்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்து மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக தனிப்பெருங்கட்சியாக வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.தவெக தலைவராக படம் வெளியாவதில் சிக்கல்களை சந்தித்திருந்த ஜனநாயகன், தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு இன்று கோயம்பேடு அருகே உள்ள பிரபலமான திரையரங்கம்ன ரோகிணில் இன்று ஜனநயாகன் ரிலீஸ் ஆனது. Actress Trisha visited Rohini Theatre to watch the movie Jananayagan