சிதம்பரம்: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்தும்,நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே வியாழக்கிழமை காலை மாணவர் சங்க நகர தலைவர் சிவ நந்தினி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடக் கூடினர். சிதம்பரம் டிஎஸ்பி தீ பிரதீப் மற்றும் போலீசார் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.இந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Over 100 students arrested while staging a sit-in protest at the Annamalai University entrance...இந்திய கடற்படையில் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணிகள்; காலியிடங்கள் - 275