இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

Wait 5 sec.

இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:பணி: Medical Assistant (Airmen Intake - 02/2027, Group - 'Y' Non - Technicalசம்பளம்: ரூ.26,900வயது வரம்பு: +2 மட்டும் முடித்தவர்கள் 21 வயதிற்குள்ளும், டி.பார்ம், பி.பார்ம் போன்ற கூடுதல் தகுதி பெற்றவர்கள் 24 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.தகுதி: கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று டி.பார்ம் அல்லது பி.பார்ம் படித்திருக்க வேண்டும்.உடற்தகுதி: குறைந்தபட்சம் 152. செ.மீ.உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்: 5 செ.மீ. விரிவடையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் உடற்திறன் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்திறன் தேர்வில் 1.6 கி.மீ.தூரத்தை 7 நிமிடங்களின் ஓடி கடக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்-அப், சிட்-அப் மற்றும் ஸ்கவாட் (குந்துதல் பயிற்சி) பயிற்சிகளை செய்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். உதவித் தொகை: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ14,600 உதவித் தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் விமானப்படையில் நிரந்தரப் பணி வழங்கப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். .விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.விண்ணப்பிக்கும் முறை: www.iafrecruitment.edcil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். எழுத்துத் தேர்விற்கு வரும்போது கொண்டுவர வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.7.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். JOIN THE IAF AS AIRMEN IN GROUP ‘Y’ (NON-TECHNICAL) MEDICAL ASSISTANT TRADE FOR AIRMEN INTAKE...