கடைசி படம்... கண்ணீருடன் கொண்டாட்டம்! ஜனநாயகன் வெளியீட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

Wait 5 sec.

தமிழகம், புதுச்சேரியில் 'ஜனநாயகன்' வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 10 மணி முதல் படம் திரையிடப்பட்டது. திரையரங்குகள் முன்பு திரண்ட ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர், விஜய்யின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து, தேங்காய், பூசணிக்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து, மேளதாளம் முழங்க நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர்..மேலும், ரசிகர்கள் கூறுகையில், "விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் மகிழ்ச்சியோடு சேர்ந்து வேதனையும் உள்ளது. சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலாவது அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று உருக்கமாகத் தெரிவித்தனர்.Fans in Tamil Nadu and Puducherry are celebrating with great enthusiasm following the release of 'Jananayagan'.