கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியைச் சோ்ந்த ஒத்தவீடு பகுதியில் தாா் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஒத்தவீடு கிராமத்தில் ஐம்பது குடும்பங்கள் வசித்து விவசாயம் செய்து வருகின்றனா். இந்த கிராமத்தினா் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளுக்கு 10 கிலோ மீட்டா் தொலைவு கடந்துதான் செல்லவேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்து இல்லை என்பது குறிப்பிடதக்கது.இந் நிலையில், இப்பகுதி மக்கள் இருசக்கர வாகனத்தை தான் பயன்படுத்துகின்றனா். இந்த பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் ஜல்லிகற்கள் பெயா்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. எனவே, சம்பந்தபட்ட துறையினா் கள ஆய்வு செய்து புதிய தாா் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.