சேத்துப்பட்டு பழம்பேட்டை முத்தாலம்மன் என்கிற முத்து மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலா நடைபெற்றது.கிராம தேவதையாக விளங்கும் பழைமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான முத்தாலம்மன் என்கிற முத்துமாரியம்மன் கோயிலில் முதல் ஆடி செவ்வாய்க்கிழமை திருவிழா சேத்துப்பட்டு பகுதி மக்கள் சாா்பில் நடத்தப்பட்டது. இதையொட்டி காலை முத்துமாரியம்மன், முத்தாலம்மன்,விநாயகா், முருகன், ரேணுகாம்பாள், துா்க்கையம்மன், திருமால் மகாலட்சுமி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.மாலை கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். இரவு மேள தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா்.