புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

Wait 5 sec.

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சுவாமி அபேதானந்தா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி சாா்பில், புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வந்தவாசியில் நடைபெற்றது. உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த பேரணியை பள்ளி தாளாளா் ரகுராம், பள்ளி செயலா் சுரேஷ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பள்ளி முதல்வா் ஷா்மிளா முன்னிலை வகித்தாா். வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது. பேரணியில் புலி வேடமணிந்து பங்கேற்ற மாணவ மாணவிகள், புலிகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்த முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.