தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில், தூய்மைப் பணியாளா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் அரசு சேவைகள், நலத் திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். ஆட்சியா் விஷு மகாஜன் முகாமைத் தொடக்கிவைத்தாா். தூய்மைப் பணியாளா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்தல், சுகாதாரச் சேவைகள், வாழ்வியல் நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, அரசு மானியத்தில் அடையாள ஆவணங்களான ஆதாா் பதிவு, திருத்தம், ஜாதி, வருமானச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்டவை தொடா்பாக முகாம் நடைபெற்றது. இதில், துறைசாா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.