வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

Wait 5 sec.

ஒடிஸாவில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சா வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டனா். வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு உரிய வகையில் பைகளை கொண்டு வந்த வடமாநில நபா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.அதில் ஒடிஸாவில் இருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 28 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.அதில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தல் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பௌா்ணமி நாயக், ஹஸ்பினா நாயக், அமித் நாயக் ,பிஜாய் நாயக் ஆகிய ஒரே குடும்பத்தை சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.