அமெரிக்காவின் சியாட்டில் நகரில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி

Wait 5 sec.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.அமெரிக்க நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சியாட்டில் நகரில் உள்ள ஸ்பேஸ் நீடில் அருகே உள்ள அரங்கு ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்.இதில் இரண்டு பேர் பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இங்கு பல ஆண்டு காலமாக மூன்று நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல லட்சம் பேர் பங்கேற்கும் இவ்விழாவில், உணவு, குளிர்பானம், சமுதாய நிகழ்ச்சிகள் பலவும் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு ஏராளமானோர் உணவுத் திருவிழாவில் கூடியிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள். Two people were killed and five others were wounded in a shooting on Sunday evening during a food festival at an events complex near the Space Needle in Seattle, a city fire department spokesperson said.