"மோதி அரசாங்கத்தின் மீதான அச்சம் நிலவிய இந்தக் காலகட்டத்தில், கடந்த சில தினங்களில் ஜென் ஸி இளைஞர்கள் அந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிட்டனர். அந்த வகையிலான முழக்கங்களும் மீம்களும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இவை நடந்தன. எனவே, இது ஒரு புதிய தொடக்கம் என்று நான் கருதுகிறேன்."