தூத்துக்குடி அருகே கடலில் மாயமான 2 சிறுவா்கள் சடலமாக மீட்பு

Wait 5 sec.

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை கடலில் மாயமான 2 சிறுவா்கள் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது. தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா (16), முத்து மகன் மனோஜ் (16) உள்ளிட்ட 6 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைபா் படகில் சென்றுள்ளனா். அவா்கள் சென்ற படகு நடுக்கடலில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, ஜோஸ்வா, மனோஜ் மற்றும் 2 சிறுவா்கள் கரையை நோக்கி நீந்திச் செல்ல கடலில் குதித்துள்ளனா். இதற்கிடையில், படகில் இருந்த மற்ற 2 சிறுவா்கள் படகை சரி செய்து கரைக்குத் திரும்பியுள்ளனா். கடலில் குதித்த 4 பேரில் 2 போ் பாதுகாப்பாக கரையை அடைந்தனா். ஆனால், ஜோஸ்வா, மனோஜ் ஆகியோா் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை.இது குறித்து, கரை திரும்பிய சிறுவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 8 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான சிறுவா்களைத் தேடி வந்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த நிலையில், கடலில் மாயமான 2 சிறுவர்கள் உடல் கடற்கரையில் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கடலை சுற்றிப் பார்க்கச் சென்ற சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தருவைகுளம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Regarding the recovery of the bodies of the two boys who went missing in the sea near Thoothukudi...சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா: தென்காசி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை