ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை!

Wait 5 sec.

ஒடிசாவில் தவுலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை தென்பட்டதால் பரபரப்பு நிலவியது. மேற்கு வங்கத்தின் ஹவுராவிலிருந்து பூரி நகரை நோக்கி தவுலி எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் இரவு சுமார் 10.45 மணியளவில் மார்கோனா ரயில் நிலையத்தில் நின்றபோது, அதன் சரக்கு பெட்டி பகுதியில் இருந்து புகை வருவது கண்டுபிடிக்கப்பட்டது.உடனே பாதிக்கப்பட்ட அந்தப் பெட்டி ரயிலில் இருந்து தனியாகக் கழற்றப்பட்டது. இதன்பிறகே, ரயில் அங்கிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து கிழக்குக் கடற்கரை ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், "பயணிகளுக்கோ அல்லது ரயில்வே ஊழியர்களுக்கோ எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. புகை எழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, தேவையான பரிசோதனைகளை முடித்த பின்னர், பாதிக்கப்பட்ட அந்த சரக்குப் பெட்டி ரயிலில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது என்றும், அதன்பின் இரவு 11.52 மணிக்கு ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Smoke was detected in a coach of the Dhauli Express in Odisha's Balasore district, officials said.சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?