ரியல்மி நிறுவனத்தில் புதிதாக குளிர் சாதனப் பெட்டி (ஃப்ரிட்ஜ்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறிய குடும்பத்தினர், திருமணமாகாதவர்கள் (பேச்சிலர்ஸ்) இலக்காகக் கொண்டு சிறிய அளவில் இவை தயாரிக்கப்படுகின்றன. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தயாரித்து உலகளவில் பிரபலமடைந்தது. தற்போது மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் ரியல்மி கவனம் செலுத்தி வருகிறது. ரியல்மி லைஃப் டெக் என்ற பெயரில் இவை தயாரிக்கப்படுகின்றன. ரியல்மி நிறுவனம் டெக் லைஃப் என்ற தரவரிசையில் தயாரிக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான குளிர் சாதனப் பெட்டி, 85 லிட்டர் கொள்ளவு உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரடியாக குளிர்விக்கும் முறையில் 600ஏ ரெப்ரிஜிரென்ட் மூலம் திறம்பட குளிர்விக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய பாத்திரங்களின் எடையைத் தாங்கும் கண்ணாடி அலமாரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. காய்கறி, பழங்களை நீண்ட நாள்கள் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் வகையில் அரோமா லாக் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்டி - பாக்டீரியல் கேஸ்கெட் வழங்கப்பட்டுள்ளதால், சீக்கிரம் பொருள்கள் கெட்டுப்போகாது; பெரிய பாட்டில்கள் வைக்கும் வசதி, முட்டை மற்றும் ஐஸ் கட்டிகள் வைக்கும் அம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரித்திருந்தாலும், தற்போது பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 180 லிட்டர், 233 லிட்டர் கொள்ளளவு உடைய குளர்சாதனப் பெட்டிகளையும் ரியல்மி தயாரித்து வருகிறது. Realme Techlife Refrigerators that appeals to small families