மும்பை: மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவால், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் தணியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிலைபெற்றது.உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வலுவான போக்கும் மற்றும் டாலர் பலவீனமடைந்ததால் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின்போது ரூபாய் ரூ. 96.18 என்ற நிலையில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 95.78 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 96.27 வரையிலும் சென்றது. இறுதியில், முந்தைய வர்த்தக நாள் முடிவை விட 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 என்ற நிலையில் நிலைபெற்றது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான மதிப்பில் இதுவரை இல்லாத மிகக் குறைந்த அளவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ. 96.53 என்ற நிலையில் நிறைவடைந்தது.The rupee appreciated sharply by 61 paise to close at 95.92 against the US dollar on Monday.கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!