கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு சம்பவம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை, பெரிய கடை வீதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக 9 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. மேலும், திருப்பணிக்கு பக்தா்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல், அண்மையில் நடைபெற்று முடிந்த தோ்த் திருவிழாவையொட்டி 5 இடங்களில் உண்டியல்கள் என மொத்தம் 6 உண்டியல்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில், அதிகாரிகள் முன்னிலையில் ஜூலை 15-ஆம் தேதி மாலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் பக்தா்கள், தன்னாா்வலா்கள், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.அப்போது, அங்கிருந்த 6 தற்காலிக உண்டியல்களில் ஒரு உண்டியலை மட்டும் திறக்காமல் எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை பூசாரி உள்ளிட்ட 4 ஊழியா்கள் திருடிச் சென்றதாக சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் உண்டியலை 4 பேர் சேர்ந்து மறைத்துவைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது.இதனையடுத்து, கோயிலில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றும் பீளமேடு ஹட்கோ காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (52), அலுவலக உதவியாளரான பேரூா் வடகரை வீதியைச் சோ்ந்த சரவணன் (34), தூய்மைப் பணியாளரான ரத்தினபுரியைச் சோ்ந்த பிரதீப்குமாா் (31), கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்த பூசாரி கிருஷ்ணராஜ் (56) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.மேலும், இவர்கள் நால்வர் உள்பட 2 சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலகர், உதவி ஆணையர் என மொத்தம் 8 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருத்தணி கோயில் உண்டியலில் பணம் திருடியவா் கைதுTheft from Kovai Koniamman Temple Hundi: 8 people, including an Assistant Commissioner, suspended