ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய இணையவழிப் பொருள் விற்பனை (இ-காமர்ஸ்) நிறுவனமாக ஃப்ளிப்கார்ட் விளங்குகிறது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க முடியும்.இ-காமர்ஸ் (E-commerce) மட்டுமல்லாது ஆர்டர் செய்த 10 முதல் 15 நிமிடங்களுக்குள் பொருள்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே விநியோகம் செய்யும் குயிக் காமர்ஸிலும் (Quick Commerce) ஃப்ளிப்கார்ட் மினியூட்ஸ் என்ற பெயரில் தனது விரைவு சேவயை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.இந்த நிலையில், வரும் சில வாரங்களில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.முதல்கட்டமாக பெங்களூரு நகரில் இந்த சேவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன்மூலம் பெறப்படும் வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களைப் பொறுத்து, அடுத்தடுத்த முக்கிய நகரங்களில் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த சேவையை ஃப்ளிப்கார்ட் செயலியிலும் இதற்கென அறிமுகப்ப்டுத்த உள்ள உணவு டெலிவரி செயலியிலும் பெற முடியும். ஏற்கெனவே ஸ்விகி, ஸொமேட்டோ போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ள நிலையில் ஃப்ளிப்கார்ட்டின் இந்த அறிவிப்பு உணவு டெலிவரி சேவையில் உள்ள போட்டியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்நியச் செலாவணி கையிருப்பு 67,623 கோடி டாலராக அதிகரிப்பு!Flipkart is set to launch its food delivery service soon.