மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக கோப்பை வென்ற இந்தியராக அனாஹத் சிங் வரலாறு படைத்துள்ளார்.கனடாவின் ஒன்டாரியோ நகரில் நடைபெற்ற மகளிர் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பிரிவில் பலம்வாய்ந்த எகிப்து வீராங்கனையை இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 3-0 கேம்களில் வென்று அசத்தினார். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தப் பிரிவில் சமபியன் பட்டம் வென்ற அசத்தியுள்ள அனாஹத் சிங்கிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வரலாறு படைக்கப்பட்டது! அனாஹத் சிங்கிற்கு வாழ்த்துகள். உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அற்புதமான சாதனை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம் எனக் கூறியுள்ளார். History Made! Congratulations to Anahat Singh (@Anahat_Singh13) on becoming the first Indian ever to win the World Squash Junior Championship.A phenomenal achievement and a proud moment for every Indian. pic.twitter.com/SfURD0Zg69— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) July 25, 2026போலியோ பாதிப்பு, விடாமுயற்சி... கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!History Made Mansukh L. Mandaviya praised anahat singh achievement