நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் புதிய பாடலான தடுமாறுதே பாடலை அண்மையில் வெளியிட்டிருந்தனர். தமிழில் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலின் விடியோவில் நடிகை நயன்தாரா புகைபிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிகரெட்டுடன் யஷ் கைகளில் ரத்தக்கறை இருக்கும் இப்போஸ்டர் கவனம் ஈர்த்து வருகிறது. பைரட்ஸ் ஆஃப் கரிபியன் திரைப்பட இசையை காப்பியடித்த அனிருத்?A new poster for the movie Toxic, starring actor Yash, has been released.