சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் பலியாகினர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் விரைந்தனர். எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Three workers were killed in an explosion while illegally manufacturing firecrackers near Sivakasi.கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்