காவிரி விவகாரத்தில் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை: துரைமுருகன்

Wait 5 sec.

உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கும்போது காவிரி விவகாரத்தில் கெஞ்ச தேவையில்லை என்று திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனது இல்லத்தில் அவர் அளித்த பேட்டியில், காவிரி தொடர்பான பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் அல்லது காவிரி மேலாண்மை குழு அல்லது ஒழுங்காற்றுக் குழுவை தான் அணுக வேண்டும். நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் உச்ச நீதிமன்றம் உத்தரவு வீணாகிவிடும். இவ்விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பது முதல்வர் சென்று வந்த பிறகுதான் தெரியும். எம்ஜிஆர் சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம். உச்சநீதிமன்றம் உத்தரவு நம்மிடம் இருக்கும் போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது. ஆனால் வாங்கிய கடனை என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். மாணவர்கள் கிளர்ந்து எழுந்தால் ஆட்சி மாற்றம் தான் நடக்கும். வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அது நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். There is no need to beg regarding the Cauvery issue when there is a Supreme Court order, stated Duraimurugan, DMK General Secretary and former Water Resources Minister.பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து: 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!