காட்டுப் பன்றி தாக்கி தொழிலாளி காயம்

Wait 5 sec.

காடையாம்பட்டி அருகே உம்பளிக்கம்பட்டியில் காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவா் பலத்த காயமடைந்தாா்.உம்பளிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (44), 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். செல்லவராய பெருமாள் கோயில் பின்புறம் உள்ள நிலத்தில் வியாழக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா்.அப்போது, காட்டுப் பன்றி தங்கராஜ் மீது பாய்ந்து கடித்தது. அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா், அதற்குள் காட்டுப் பன்றி வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றது. காயடைந்த தங்கராஜ் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.