கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 53 கிலோ பிரிவில் பளுதூக்குதலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.23 வயதாகும் ஞானேஸ்வரி யாதவ் ஸ்நாட்ச் பிரிவில் 88 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ என மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார்.பளுதூக்குதலில் ஞானேஸ்வரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதால் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த 5 பதக்கங்களில் 4 பதக்கங்கள் பளுதூக்குதல் பிரிவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.Gyaneshwari Yadav has won a silver medal in weightlifting at the Glasgow Commonwealth Games.தங்கப் பதக்கம் வென்ற பின் அழுதது ஏன்? மனம் திறந்த மீராபாய் சானு!