எதிர்காலத்திற்காக... பாக்கெட்டில் வெறும் ரூ. 20 உடன் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள்!

Wait 5 sec.

அரசுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் பலரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என நடிகர் இர்ஃபான் கான் மனைவியும் திரைக்கதை ஆசிரியையுமான சுதபா சிக்தர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காவல் துறையின் தடியடியால் ரத்தம் சிந்திய இளைஞர்களில் பலரும் பாக்கெட்டில் வெறும் ரூ. 20 மட்டுமே வைத்துக்கொண்டு, எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையுடன் போராட்டத்தில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 20ஆம் நாளில் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஜூலை 21) 24வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடுத்தனர். பெண்கள் உள்பட சிறுமிகளின் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வி மற்றும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக பாலிவுட் எழுத்தாளர் சுதபா சிக்தர் பதிவிட்டுள்ளதாவது:''போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரும் இளைஞர்கள். இதில் சிலர் பாக்கெட்டில் வெறும் 20 ரூபாயுடன் மட்டும் வைத்துக்கொண்டு பெரும் நம்பிக்கையுடன் பங்கேற்றுள்ளனர். இதில் பெருமாபாலானோர் செல்வச் செழிப்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களைக் காக்க யாரும் வரப்போவதில்லை. எனினும் அவர்கள் உரிமைக்காக பெரும் பலத்தை எதிர்த்து களத்தில் நிற்கின்றனர். பேருந்துகளுக்காகவும் ரயில்களுக்காகவும் காத்திருப்பவர்கள் எதிர்கால மாற்றத்திற்காக எழுதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிகிறது. கூட்டத்தில் ஒருவர் கூட அமைச்சரின் மகனோ மகளோ அல்ல. இச்சம்பவம் இதயத்தை துளைக்கிறது. இந்தியாவில் நெடுங்காலமாக இதுபோல ஒரு சம்பவம் நடந்ததில்லை. இன்று நடந்ததை மன்னிக்க முடியாதது'' எனப் பதிவிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Sutapa Sikdar (@sikdarsutapa)ரேவதி, அதிதி ராவ்... சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் நடிகர்கள்!students someone came with 20 rupees in their pocket full of hope Cockroach janata party protest Sutapa Sikdar