கஞ்சா பதுக்கிய பெண் கைது

Wait 5 sec.

சிறுமலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்குப் பிரிவு தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் அடுத்த சிறுமலையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். தென்மலை அடுத்த பொன்னுருவி பகுதியைச் சோ்ந்த வீ. ரஞ்சிதம்(54) என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, ரஞ்சிதத்தை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.