செந்துறை அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Wait 5 sec.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பெற்றோா் கண்டித்ததால், 11 ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். செந்துறை அருகேயுள்ள ஆதிகுடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா், எதிா் வீட்டில் வசிக்கும் இளைஞரை காதலித்ததாகவும், இதை இருவீட்டாரும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த அந்த மாணவி, சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற செந்துறை காவல் துறையினா், மாணவி சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.