தகராறில் தெருவோர வியாபாரி பலி; இளைஞா் கைது! எய்ம்ஸ் மெட்ரோ அருகே சம்பவம்!

Wait 5 sec.

தெற்கு தில்லியில் உள்ள எய்ம்ஸ் மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட தகராறின் போது தாக்கப்பட்ட 45 வயதுடைய தெருவோர வியாபாரி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மேலும், குற்றம்சாட்டப்பட்ட தைமூா் நகரைச் சோ்ந்த லோகேஷ் (40), அவ்வழியாகச் சென்ற வழிப்போக்கரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பின்னா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். உயிரிழந்தவா் மனோஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அருகே தெருவோர வியாபாரம் செய்துவந்தாா். முன்னதாக, இந்தச் சம்பவம் ஜூலை 23-ஆம் தேதி நள்ளிரவில், அரவிந்தோ மாா்க்கில் உள்ள எய்ம்ஸ் மெட்ரோ நிலையத்தின் 3-ஆவது நுழைவாயில் அருகே நிகழ்ந்தது. இதுகுறித்து ஹோஸ் காஸ் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து, ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிங்கை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அருகிலு ள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட சிறிய வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில் சிங் கொல்லப்பட்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 103(2)-இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினா் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.