மகன் துல்கர் சல்மான் பிறந்த நாளுக்கு செல்லப் பெயருடன் வாழ்த்திய மம்மூட்டி!

Wait 5 sec.

நடிகர் துல்கர் சல்மான் பிறந்த நாளுக்கு அவரது தந்தையும் நடிகருமான மம்மூட்டியின் வாழ்த்து சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. நடிகர் மம்மூட்டி - சுல்ஃபத் குட்டிக்கும் மகனாக துல்கர் சல்மான் 1983ல் கொச்சியில் பிறந்தார். இவர் தற்போது முன்னணி நடிகராக தென்னிந்தியாவில் முன்னேறியுள்ளார்.நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் துல்கர் சல்மான் அசத்தி வருகிறார். அவரது தயாரிப்பில் உருவான லோகா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. துல்கர் சல்மான் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள இரண்டு படங்களில் இருந்தும் பாடல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்ரீ ஸ்ரீ என்ற படத்தில் இருந்து வானே வானே என்ற பாடல் வெளியானது. இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) ஆகிய படங்களில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இதன் முதல் பாடலான மிட்டாய் மழை பாடல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், துல்கரின் தந்தையும் நடிகருமான மம்மூட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், “பிறந்த நாள் வாழ்த்துகள் சாலு” எனக் குறிப்பிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பெயரை வைத்தது அவரது அம்மா எனக் கூறப்படுகிறது. சாலு என்ற செல்லப் பெயருக்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை. சமூக வலைதளத்தில் பலரும் இந்தப் பெயருக்கான காரணத்தைக் கேட்டு வருகிறார்கள். Happy Birthday Chaalu pic.twitter.com/DXrXeh7hEN— Mammootty (@mammukka) July 28, 2026லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படத்தின் வெளியீட்டு டிரைலர் தேதி!Happy Birthday Chaalu, Mammootty wishes his son Dulquer Salmaan