ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 7% சரிவு!

Wait 5 sec.

புதுதில்லி: முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர், 2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டிற்கான அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.17 சதவீதம் சரிவை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் 7 சதவீதம் சரிந்தன.மும்பை பங்குச் சந்தையில், இந்த பங்கு 6.97 சதவீதம் சரிந்து ரூ. 2,023.15 ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது இந்த பங்கு 7.16 சதவீதம் சரிந்து 52 வாரக் குறைந்தபட்ச அளவான ரூ. 2,019 ஐ தொட்டது.நிஃப்டி-யில் இந்த பங்கு 6.98 சதவீதம் சரிந்து ரூ. 2,022.70 ஆக நிறைவடைந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35,619.79 கோடி குறைந்து ரூ. 4,75,357.56 கோடியாக உள்ளது.அதிக வரிகள் உள்ளிட்ட காரணத்தால், 2027 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.17 சதவீதம் குறைந்து ரூ. 2,680 கோடியாக இருப்பதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் அறிவித்தது.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ரூ. 2,768 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.Hindustan Unilever Ltd tanked 7 per cent after the firm reported a 3.17 decline in consolidated net profit.டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!