செஸ் உலக சாம்பியன்ஷிப் 2026 இறுதிப் போட்டி ஸ்விட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் டி. குகேஷ் மற்றும் ஜாவோகிர் சிண்டாரோவ் மோதுகிறார்கள். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மோதும் இருவருக்குமே 20 வயது என்பதால், யார் வென்றாலும் செஸ் வரலாற்றில் சாதனையாகவே பார்க்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, குகேஷ் 18 வயதில் வென்று முதலிடத்தில் இருக்கிறார்.இந்தப் போட்டியில் ஜாவோகிர் சிண்டாரோவ் வென்றால் இரண்டாவது இளம் உலக சாம்பியன் என்ற பட்டத்தைப் பெறுவார். குகேஷ் வென்றால் முதல் இரண்டு இடத்தையும் அவரே பிடிப்பார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெனிவா நகரத்தில் இறுதிப் போட்டி வரும் நவ.25 முதல் டிச,15 வரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஃபிடேவின் இடைக்காலத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இது குறித்து கூறியுள்ளதாவது: இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன. பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு சமமான மண்ணில் நடத்தலாம் என ஃபிடே முடிவெடுத்துள்ளது. ஜெனிவா நகரத்துக்கு வரலாற்றுப் பாரம்பரியமும் இருக்கிறது. ஸ்விட்சர்லாந்து மக்கள் இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க அற்புதமான ஒரு வாய்ப்பாக அமையும் எனக் கூறியுள்ளார். முன்னதாக, 2024ல் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் இளம் வயதில் உலக சாம்பியன் ஆனார். உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ் ஃபிடே கேண்டிடேட்ஸ் 2026 தொடரை வென்று அசத்தினார். இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி 14 கிளாசிக்கல் ஆட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதலில் யார் 7.50 புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 14 போட்டிகளிலும் சமமாக இருந்தால், டை பிரேக்கரில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுமென ஃபிடே அறிவித்துள்ளது.காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!Will Gukesh retain the World Chess Championship? Venue and dates for the final announced!