ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு!

Wait 5 sec.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகிர் அப்பாஸ் பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்திய அணிக்காக அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள்.இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட வேண்டும் என அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகிர் அப்பாஸ் பேசியுள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு பரந்த அனுபவம் உள்ளதால், அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அவர்கள் இடம்பெறாமலிருக்க எந்த ஒரு காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கும் வரை, வயது என்பதை ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.விராட் கோலி மிகவும் ஃபிட்டாக உள்ளார். ரோஹித் சர்மா அவரது ஃபிட்னஸில் சற்று கவனம் கொடுக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதைப் பார்த்தேன். கிரிக்கெட்டில் இத்தனை ஆண்டுகள் பயணம் செய்த பிறகும், அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.Former Pakistan captain Zaheer Abbas has spoken in support of senior Indian players Rohit Sharma and Virat Kohli.என்னுடைய பந்துவீச்சு தொடர்பாக கேள்வி கேட்பது பேட்டர்கள் வேலையா? கோபமடைந்த உஸ்மான் தாரிக்!