வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறினாரா பிரகலாத் ஜோஷி? ராகுல் காந்தி விமர்சனம்

Wait 5 sec.

வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறியவருக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.இவர் ராஜிநாமா செய்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:இளைஞர்கள் மற்றும் பெண்களின் போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. ’பாலியல் வன்கொடுமையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என்று கூறிய ஒருவரை பாஜக அரசு மத்திய கல்வித்துறை அமைச்சராக நியமித்துள்ளது. அவர் மிகவும் மோசமானவர். வன்கொடுமையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவரை விட மோசமானவர் யாருமில்லை. அவர்தான் தற்போதைய கல்வித்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.இது விசித்திரமானது. பிரதமர் மோடியின் இந்த செயல் விசித்திரமாக உள்ளது. அவரது அமைச்சரவையில் பலபேர் உள்ளனர். ஆனால் அவர், பாலியல் வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்Opposition Leader Rahul Gandhi has alleged that the post of Union Education Minister has been given to a person who advocated for the protection of perpetrators of atrocities.