ஜென் ஸீ தலைமுறை இளைஞர்கள் சொந்த உழைப்பில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் இன்று (ஜூலை 28) தெரிவித்தார். ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஜென் ஸீ தலைமுறை இளைஞர்கள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் கங்கனா ரணாவத் பேசியதாவது:''போராட்டத்தில் ஈடுபட்டு இழிவான சொற்களைப் பேசியவர்கள் என்ன மாதிரியான மாணவர்கள். என்ன மாதிரியான மொழியை அவர்கள் (ஜென் ஸீ இளைஞர்கள்) பயன்படுத்துகின்றனர்.அவர்கள் எந்த வகையில் மாணவர்களைப்போன்று நடந்துகொள்கிறார்கள். 75 வயதான நமது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். நாங்களும் (பாஜக) மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இந்த இளைஞர்கள் தங்களின் பெற்றோர் வருவாயில் வாழ்கின்றனர். சொந்தமாக வாழவே முடியாதவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகப் போராடுகின்றனர்'' எனக் குறிப்பிட்டார். நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து இளைஞர்கள், மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை, தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இப்போராட்டத்தில் ஜென் ஸி தலைமுறையினரின் நடவடிக்கை வெகுவாக பலரால் கவரப்பட்டது. எனினும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காGen Z youth must learn to live by their own hard work: Kangana Ranaut