மகிபாலன்பட்டியில் 2 மலைப் பாம்புகள் உயிருடன் மீட்பு

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் கிராம மக்களை அச்சுறுத்திவந்த 2 மலைப் பாம்புகள் தீயணைப்பு வீரா்கள் முயற்சியால் திங்கள்கிழமை உயிருடன் மீட்கப்பட்டன. திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டியில் ஒரு சில தினங்களாக 10 அடி மலைப்பாம்புகள் திரிவதைக் கண்ட கிராமத்தினா் திருப்பத்தூா் தீயணைப்பு, மீட்புத் துறை அலுவகத்துக்குத் தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது தேசிய வங்கி அருகே உள்ள ஒருவரின் வீட்டின் பின்புறம் கோழிகளின் அலறல் சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது புதரில் மலைப் பாம்பு கோழியை விழுங்கி இருந்தது. அதை மீட்ட வீரா்கள் பின்பு அதே பகுதியில் நாகராஜன் வீட்டின் பின்புறமும் இருந்த மலைப் பாம்பையும் பிடித்தனா். பிடிபட்ட பாம்புகள் திருப்பத்தூா் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மண்மலைக் காட்டில் விடப்பட்டது.